Wednesday, August 27, 2008

வாழ்க்கை

பச்சை விளக்கு விழுந்தவுடன்
முன்னேறினோம் நாம்
ஆனால், அந்த பிச்சைகார சிறுமி?

Labels:

Saturday, August 23, 2008

காதல்

ராஜேஷ்குமார் படிப்பாயா என்றேன்
ஹிட்ச்காக்கின் தீவிர ரசிகை என்றாய்
‘mustafa mustafa’ பாடல் நண்பர்கள் நியாபகம் கொடுக்கும் என்றேன்
‘Summer of 69’ கண்களில் நீர் சுரக்கும் என்றாய்
டீ கடை சமோசா என் ரத்தத்தில் உண்டு என்றேன்
‘Dominoss Chilli Pizza’ என் உயிர் என்றாய்
சிவாஜியில் தலைவர் கலக்கிவிட்டார் என்றேன்
‘Forrest Gump’ நெஞ்சை தொட்டது என்றாய்
காதல் என்றேன் தயக்கத்துடன்
ஆமாம் என்றாய் நாணத்துடன்
உலகின் இரு துருவங்கள் போல் இருந்த நம்மை
இணைத்தது காதலா??
அல்லது இணைய வேண்டும் என்று நாம் எடுத்த முடிவிற்கு
பழி ஏற்றது காதலா?

Labels: ,

Wednesday, August 13, 2008

தங்கமகன்


நீ துப்பாகியில் நிரப்பியது தோட்டாக்கள் அல்ல
பல கோடி இந்தியர்களின் ஏக்கத்தினை
நீ வீழ்த்தியது பிற நாட்டவர்களை அல்ல
நம் நாட்டை பிடித்திருந்த அவமானத்தை
நீ வென்றது தங்கத்தை அல்ல
நூறு கோடி இந்தியர்களின் மனதை
தேசத்தை தலை நிமிர வைத்தவன் நீ
தேசமே உனக்குத் தலை வணக்கும், தங்க மகனே !!

Labels: , ,

Sunday, August 10, 2008

நம்பிக்கை


இந்த Beijing Olympics இந்த படத்தை பார்த்ததுமே நமக்குள்ள (அதாவது எனக்குள்ள) இருக்கும் கற்பனை குதிரை தறிகெட்டு ஓட ஆரம்பிச்சது. அதோட விளைவுதான் இந்த அற்புத கவிதை

"தெரு விளக்கின் மேல் நின்று வேடிக்கை பார்கிறார்கள்
அவர்கள் நாட்டு வீரர்கள் பரிசு வெல்வார்கள் என்ற நம்பிக்கையில்
ஆனால் அவர்களுக்குத் தெரியாது
நம் நாட்டு வீரர்கள் வாழ்வதே தெரு விளக்கின் கீழ்தான் என்று!!"

இந்த கவிதைய படிச்சு முடிச்சிட்டு கல், முட்டை, தக்காளி இதெல்லாம் தேட கூடாது சொல்லிட்டேன். பேச்சு பேசத்தான் இருக்கனும்

Labels: ,