Friday, February 12, 2010

காதல்

திரைபடத்தில் முத்தக்காட்சி வரும் பொழுது உன்னை பார்ப்பது
உன் முத்ததிற்காக அல்ல
சீ என்று சொல்லும் உன் வெட்கதிற்காக

நான் சண்டைக்காரி, குழந்தை போல் அடம் பிடிப்பேன்
என்னை ஏன் காதலிக்கிறாய் என்றாயே
இன்னுமா புரியவில்லை ?
இதனால்தான் உன்மீது பைத்தியமாய் இருக்கிறேன் என்று

நான் உன்னுடன் சண்டை போடுவது கோவத்தினால் இல்லை
சமாதானம் ஆகும் பொழுது உன் முகத்தில் தெரியும் காதலுக்காக

Labels: ,

Saturday, August 23, 2008

காதல்

ராஜேஷ்குமார் படிப்பாயா என்றேன்
ஹிட்ச்காக்கின் தீவிர ரசிகை என்றாய்
‘mustafa mustafa’ பாடல் நண்பர்கள் நியாபகம் கொடுக்கும் என்றேன்
‘Summer of 69’ கண்களில் நீர் சுரக்கும் என்றாய்
டீ கடை சமோசா என் ரத்தத்தில் உண்டு என்றேன்
‘Dominoss Chilli Pizza’ என் உயிர் என்றாய்
சிவாஜியில் தலைவர் கலக்கிவிட்டார் என்றேன்
‘Forrest Gump’ நெஞ்சை தொட்டது என்றாய்
காதல் என்றேன் தயக்கத்துடன்
ஆமாம் என்றாய் நாணத்துடன்
உலகின் இரு துருவங்கள் போல் இருந்த நம்மை
இணைத்தது காதலா??
அல்லது இணைய வேண்டும் என்று நாம் எடுத்த முடிவிற்கு
பழி ஏற்றது காதலா?

Labels: ,