Saturday, August 23, 2008

காதல்

ராஜேஷ்குமார் படிப்பாயா என்றேன்
ஹிட்ச்காக்கின் தீவிர ரசிகை என்றாய்
‘mustafa mustafa’ பாடல் நண்பர்கள் நியாபகம் கொடுக்கும் என்றேன்
‘Summer of 69’ கண்களில் நீர் சுரக்கும் என்றாய்
டீ கடை சமோசா என் ரத்தத்தில் உண்டு என்றேன்
‘Dominoss Chilli Pizza’ என் உயிர் என்றாய்
சிவாஜியில் தலைவர் கலக்கிவிட்டார் என்றேன்
‘Forrest Gump’ நெஞ்சை தொட்டது என்றாய்
காதல் என்றேன் தயக்கத்துடன்
ஆமாம் என்றாய் நாணத்துடன்
உலகின் இரு துருவங்கள் போல் இருந்த நம்மை
இணைத்தது காதலா??
அல்லது இணைய வேண்டும் என்று நாம் எடுத்த முடிவிற்கு
பழி ஏற்றது காதலா?

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home