Sunday, September 28, 2008

அத்த மக

ஆத்தோரம் அலையடிக்க அரசமர காத்தடிக்க
ஊர் குருவி பாட்டு
படிக்குதுநெஞ்செல்லாம் உன்
நெனவாநெனப்பெல்லாம் உன் முகமா
நானும் தவம்
கெடக்கஅண்ணாந்து பாக்காம அடி அடியா போறவளே
அத்த மக ரத்தினமே
ஆத்தோரம் வளந்திருக்கும் அரளிச்செடிய கொளுத்தினது போல
நெஞ்சோரம் பொதச்சிருந்த கனவையெல்லாம் கொளுத்திவிட்டு
புருசனோட போறவளே
விடியலுக்குள்ள சேதி வரும்
உயிரே, உன்ன பிரிஞ்சு வாழும் உடம்ப வந்து பாரு

Labels: , ,

Thursday, September 11, 2008

பிரிவு

நீ உதறிச்சென்றது என் கைகளை மட்டும் அல்ல நான் உன் மீது கொண்டிருந்த தீரா காதலையும்
நீ உருவிச்சென்றது என் காதலை மட்டும் அல்லநெஞ்சாங்கூட்டில் நட்டு வைத்திருந்த நேசத்தையும்
மாற்றத்தை எதிர்கொள்வேன் என்று மார்தட்டியவன் இன்று மாற்றத்தை மாற்றத் துடிக்கிறேன்
தெய்வங்கள் கொல்லும் என்று தெரிந்தவன் தேவதையும் கொல்லும் என்பதை அறிந்தேன்
உடலை விட்டு உயிர் பிரிந்தால் பிணமாம்!!!உன்னை பிரிந்து உயிர் வாழும் நான்??

Labels: , , ,

Monday, September 08, 2008

காதலி

கடவுளை பார்த்ததுண்டா என்று கேட்டனர்
தேவதையை பார்த்ததுண்டு என்று கூறினேன், உன் நினைவால்

எங்கு தொலைபேசி ஒலி கேட்டாலும் உன் நினைவு கொள்கிறேன்!!

கோவிலில் கடவுளும் உன்னை பார்த்த பின்புதான்
எங்களுக்கு தரிசனம் தருகிறார்

என்றும் முறைக்கும் பூக்காரி இன்று சிரிக்கிறாள்
நான் ரோஜா ஒன்று வாங்கியதும்

Labels: , ,