கனவு
"திருடண்டா நீ"
"யாரு நானா? நான் என்னடி பண்ணினேன்"
"தெரியாத மாதிரி கேக்காத. நீ திருடினது என்னனு உனக்கு தெரியாதா?"
"சத்தியமா இந்த chocolatea நான் காசு கொடுத்துதான் வாங்கினேன்.
என்ன நம்பு"
"ரொம்ப சாமர்த்தியமா பேசறதா நினைப்பா உனக்கு? இந்த பேச்சுக்கெல்லாம் யாரும் மயங்க மாட்டங்க தெரியும்ல"
"அப்படியா, அப்ப நீ மட்டும் எப்படி மயங்கின?"
"என்ன பண்றது. காதலுக்கு கண் இல்லையே"
"கரெக்ட். எனக்கும் கண் இல்லாம போய்டுச்சே"
"போடா. வேணும்னா அந்த குதிரை வால் ரேகா கிட்டயே போ"
"நான் என்ன மாட்டேனா சொல்றேன். ஊருக்குள்ள எல்லாருக்கும் நம்மள பத்தி தெரிஞ்சி போச்சே. நான் என்ன பண்றது?"
"அட பாவி, இப்பவே இப்படி பேசறியே. கல்யாணத்துக்கு அப்புறம் என்ன சொல்லுவியோ நீ. உன்ன நம்பினது என்னோட தப்பு"
"ச்சே ச்சே அப்டில்லாம் இல்லடா செல்லம். சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு சாக்லேட் கிடையாது. ஏன்னு தெரியுமா?"
"ஏன்டா??"
"ஏனா ஸ்வீட் இருக்குனு எறும்பு கடிச்சா என்ன பண்றது. இப்பவும் பாரு ஒட்டிகிட்டு இருக்கு."
"எங்கடா?? "
"இரு அத கையால எடுக்க முடியாது. அதனால…."
"டேய் பொறுக்கி. சீ போடா……."
அவன் அவள் அருகில் நெருங்குகையில்
"Major, its time to move sir"
மூன்று வருட காதலுக்கு பிறகு, திருமணத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் இருந்த சமயம் திவிரவாத தாக்குதலில் அவள் பலியான பிறகு, தன் வேலையை விட்டு விட்டு, தன் கனவு கருகியதை போல் வேறு யார் கனவும் கலையக்கூடாது என்பதற்காக ராணுவத்தில் சேர்ந்து திவிரவாதிகளை வேட்டையாடும் சிறப்பு படையின் தலைவன் மேஜர் சரவணன், தனது அடுத்த வேட்டைக்கு புறப்பட்டான். கண்கள் நிறைய கனவோடு காத்திருக்கும் பலரின் கனவை காக்கும் கனவோடு.